ஆக்லாந்தை தாக்கியது திடீர் வெள்ளம்..! அடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
நியூசிலாந்தின் மிக பெரிய நகரமான ஆக்லாந்தில் கடந்த மூன்று நாட்களாக திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மில்லியன் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கட்டிடங்கல் சேதமடைந்துள்ளது. தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIWA) தகவல் படி, ஆக்லாந்து ஜனவரி மாத மழைபொழிவை சராசரி மழையின் அளவை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் ஆண்டு சராசரி மழைப்பொழிவை விட 40% க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த திடீர் வெள்ளம் குறித்து நியூசிலாந்தின் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், “ஆக்லாந்தின் சில பகுதிகளில் பலத்த சேதம் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இந்த வெள்ளத்தால் சேதமடைந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் தற்போது 35 பேருக்கு அவசர தங்கும் விடுதி தேவைப்படுவதாகவும்” அவர் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையில் ஆக்லாந்து மற்றும் கிரேட் பேரியர் பகுதிககளில் ஜனவரி 31 முதல் 12 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதே வேகத்தில் மழை தொடர்ந்தால் மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என ஆக்லாந்து கவுன்சில் தெரிவித்துள்ளது.