எங்கெல்லாம் கனமழை? எங்கெல்லாம் மிதமான மழை? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்!
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டியளித்துள்ளார்.

சென்னை : கோடை காலம் ஆரம்பித்துள்ள சமயத்தில் வெயிலின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 12 மணிநேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகள் என பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதில், கடந்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை பதிவாகி இருந்தது.
வளிமண்டல சுழற்சி :
வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை தென்தமிழக வங்கக்கடலோர பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் மேற்கு நோக்கிய நகர்வின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் , புதுவை உள்ளிட்ட அநேக இடங்களிலும் மார்ச் 12ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை – மிக கனமழை :
கனமழையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியகுமாரி திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வருகிற 12ஆம் தேதியன்று தென் பகுதி மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலை :
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் இயல்பை விட்டு சற்று அதிகமாகவும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. வருகிற மார்ச் 13ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரையில் 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் தெற்கு கேரளா கடற்கரை பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகளிலும் 12, 13 ஆகிய தேதிகளில் தெற்கு கேரளா கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025
பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
March 12, 2025