நெருங்கி வரும் தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் தாழ்வு மண்டலம் காரணமாக, 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்பொழுது வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1,050 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 980 கி.மீ., நாகையில் இருந்து 880 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 25, 2024
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று (நவ.25) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (நவ.26) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மறுநாள் (நவ.27) மற்றும் (நவ.28) வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குறிப்பு : மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரெட் அலர்ட்
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 25, 2024