நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி ஓமன் அருகே தேஜி புயல் கரையை கடக்கிறது.
மேலும், இந்த புயல் உருவாகினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். இதனால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் சில…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) அன்று…
சென்னை : நடிகர் விஜய் அவருடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…