சூறையாடிய மோக்கா புயல்: பலி எண்ணிக்கை 81ஆக உயர்வு.!
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
மேலும், வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டன.
வங்காளதேசத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தற்போது, இந்த வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜாரில் நூற்றுக்கணக்கான தற்காலிக தங்குமிடங்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.