Cyclone Hamoon [File image]
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. ‘ஹமூன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் நேற்று (24 ஆம் தேதி) தீவிர புயலாக மாறி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதனையடுத்து மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுப்பெற்றது.
இந்த தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மிக தீவிர புயலாக வலுப்பெற்ற ஹமூன் புயல், ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டது. தொடர்ந்து இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே இன்று (25 ஆம் தேதி) கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஹமூன் புயல், தீவிர புயலாக மாறி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு நோக்கி நகர்ந்து, புயலாக வலுவிழந்து கடலோர வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…