இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் புயல் சின்னம்!
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஃபெங்கல் புயலாக இன்று உருவாகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் தற்பொழுது, நாகப்பட்டினத்திற்கு தெற்கே – தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது.
இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று (நவம்பர் 27ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது.
இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.