நெருங்கியது டானா., வங்க கடலோரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.! வெளியான முக்கிய தகவல்.!
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நிலை கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடலோர மாவட்டங்களுக்கு புயல் மழை எச்சரிக்கைக்கான சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் டானா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அக்டோபர் 24 ஆம் தேதி காலை 8.30 மணி நேரத்தில், வடமேற்கில் மையம் கொண்டிருந்தது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கே சுமார் 210 கிமீ தொலைவில், ஓடிசா மாநிலம் தாமராவிலிருந்து 240 கிமீ தென்-தென்கிழக்கே, மேற்கு வங்கத்தில் சாகர் தீவுக்கு தெற்கே 310 கிமீ-ல் நிலை கொண்டுள்ளது.
இதுஇன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் இருந்து 120 கிமீ வேகம் வரையில் வீசும்.” என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Subject: Severe Cyclonic storm “DANA” over northwest Bay of Bengal (Cyclone Warning for Odisha and West Bengal coasts: Red Message)
The severe cyclonic storm “DANA” (pronounced as Dana) over northwest & adjoining central Bay of Bengal moved north-northwestwards with a speed of…
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2024