சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் இது தான்!
வேலூர், திருப்பத்தர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மிதமான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதைப்போல, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் காரைக்கால். இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், இன்று முழுவதும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.