இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!
இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.