இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழக்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Nowcast for 09.11.2024 pic.twitter.com/1t7VEZMFKA
— tnsdma (@tnsdma) November 9, 2024