அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை.!
தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று மழைக்கு வாய்ப்பான பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.