அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் காலமானார்..! புதுச்சேரி முதல்வர் இரங்கல்..!
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இன்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, சேலம், கருர், ஈரோடு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.