பிற்பகல் 1 மணி வரை இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளது.