rain [file image]
Weather Update: அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்கத்தின் 4 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் மாலை 4 மணிக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…