அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேத்திற்கு (காலை 10 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேத்திற்கு (காலை 10 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அது மட்டும் இல்லாமல், அந்த் 13 மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச்செல்லுங்கள்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 22, 2024