RAIN [file image]
வானிலை : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில், நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
அதனை தொடர்ந்து இன்று தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
வெப்ப நிலையை பொறுத்தவரையில், வரும் ஏப்ரல்6-ம் தேதிவரை வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதைப்போல, உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…
உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…