இன்று 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Heavy Rain in Tamilnadu next 3 Hours

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே 5 நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இன்று தமிழகத்த்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! 

இந்த நிலையில், மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்