தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் பகுதி வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும், இது வரும் 29ஆ தேதி வரை நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக மாற உள்ளது.
வருகிறது டிசம்பர்.! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.!
இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் 30ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…