தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நன்னிலம் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி மணி நேரத்திற்குமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.