தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

RAIN FALL

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நன்னிலம் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி மணி நேரத்திற்குமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2  மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்