தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக 10 மணி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடையும் என்று தெரிவித்தது போல தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் ஒரு சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024