வெயிலுக்கு ஜில் ஜில்! இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Weather Update : இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஒரு சில இடங்களில் வெயிலுக்கு இதமாக மிதமான மழையும் பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று கூட திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை பெய்தது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.