நாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தகவல் கொடுத்துள்ளது.
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பருவமழை குறித்து வெதர்மேன்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடையும் என தமிழ் நாடு வேதர் மென் பிரதீப் ஜான் தகவலைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” “சென்னையிலிருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் . நவம்பர் 12 முதல் பருவமழை தீவிரம் அடையும். அந்த நாள் தமிழகத்திற்கு ஒரு சரியான விடுமுறை நாள்….12ம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் வாரம்” எனக் கூறியுள்ளார்.