19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! சென்னை, நெல்லை, நாகை, தஞ்சை..,
தமிழ்நாட்டில் இன்று சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் பதிவிடுகையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தென்காசி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, காரைக்கால், புதுச்சேரியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (காலை 10 மணி வரையில்) லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.