rain [Image source: file image ]
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்
வெப்ப சலனம் காரணமாக, இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர்.…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள்…
சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான…
உத்தரப் பிரதேசம் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440…
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், 'FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ்…