நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே கவனம்…தமிழகத்திற்கு நாளை ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட்!
நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-ஆம் தேதி நவம்பர் ஆறு மாவட்டங்களிலும், நவம்பர் 6-ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் நவம்பர் 7, 8, 9 லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.