குறைந்தது புயல் சின்னத்தின் வேகம்… ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்!
முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.
முன்னதாக, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் (நவ.27ஆம் தேதி) புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றிரவு 3 கிமீ வேகத்தில் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, நகரமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒருவேளை இன்றைய தினம் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
மேலும், இது நவ.30ஆம் தேதி காலையில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் அன்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடக்கும். மேலும், அந்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (நவ.30) கரையை கடக்க கூடும் என வும் கணிக்கப்பட்டுள்ளது.