“மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்” – பிரதீப்ஜான் எச்சரிக்கை.!
சென்னையில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், மழையின் தீவிரம் வேகமெடுத்து இருப்பதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 12 மணி வரை) ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும். ECR, OMR பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும்.
மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Good rains recorded across KTCC (Chennai) with South Chennai getting bit more as per the wishes of the people.
Now steady rains will continue for around 2 hrs with variable intensity at times and then there might be a break. First the rains will stop in south Chennai, ECR and… pic.twitter.com/JK0FAFySyp
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2024