தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
Weather Update : தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் பல மாவட்டங்களில் கொளுத்தி வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் வெயிலை தணிக்க மிதமான மழையும், சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் .நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 13 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதைப்போலவே இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.