1 மணி வரை இந்த 10 மாவட்டத்துக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் இன்று (மே 22) பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (22-4-2024) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்வதால் நாளை மறுநாள் அதாவது மே-24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்.
அதனை தொடர்ந்து, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.