வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுத்து வாங்க போகும் கனமழை.!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 5.30 மணி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுச்சேரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தபடி, நேற்று நள்ளிரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.