heavy rain, Rain fall, TN Rains, Weather Update
சென்னை : தற்போது, வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோடை மழை பெய்யத் தொடங்கியதால் வெப்பம் தணிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வந்தது. தற்போது, இதன் காரணமாக, இன்று (22-4-2024) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது வடகிழக்கு திசையில் நகர்வதால் நாளை மறுநாள் அதாவது மே-24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் எனவும் அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தமிழக உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…