உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி.!
வானிலை மையம் : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், கேரள மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சூறாவளி
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 2 நாள்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.