அக்.17-ம் தேதி கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்.. சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்.!
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (14-10-2024) காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது.
இது, நாளை காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே 17-ஆம் தேதி காலை வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரத்தை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 17-ம் தேதி சென்னைக்கு வடக்கு திசையில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், மேக கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.
🚨 Chennai Alert 🚨 #depression expected to make landfall tonight into tomorrow, bringing extremely heavy rainfall.
Stay prepared, Chennai! Ensure safety measures are in place.
🚨 சென்னை எச்சரிக்கை 🚨 #அழுத்த தாழ்வு நிலை இன்று இரவு முதல் நாளை கரையை கடக்கும் என… pic.twitter.com/RzQ213nQZ3
— Bharggav Roy 🇮🇳 (@Bharggavroy) October 15, 2024