2017 ஆம் ஆண்டுக்கு முக்கிய இடம் !மக்களை ஆட்டிப்படைத்த வருடங்களில் இணைந்தது ….
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையை அடிப்படையாக வைத்து உலகின் சராசரி வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட ஒன்று புள்ளி ஒன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாக 2017ஆம் ஆண்டு இடம்பிடித்துள்ளது.
2016ஆம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாகும். இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18ஆண்டுகளில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு மட்டும் அதிக வெப்பமிக்க 17ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …