மீனவர்கள் கவனத்திற்கு: வங்கக்கடலில் இன்று 135 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்.!

cyclone fishing

சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சூறாவளிக்காற்று மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 5.30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, இன்று காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இந்த புயலுக்கு ரெமல் புயல் என்ற பெயரையும் வைத்து இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்து இருந்தது.இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று இரவு வலுப்பெற்று, நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இந்நிலையில், இன்றும் முதல் நாளை மாலை வரை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் வங்கக்கடல் பகுதிகள், இதர மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆழ்க்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்