மக்களே அலெர்ட்! 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்
சென்னை, விழுப்புரம், கடலூர் என 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வருவதால். இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும், நவ-9 முதல் 12 வரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.