வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.
அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் “கத்திரி வெயில்’ நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு மார்ச் 2ஆவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால், இம்முறை அக்னி வெயில் அதிகமாக இருக்காது என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அக்னி நட்சத்திரம் காலங்களில் அதிகமாக தண்ணீர் அருந்துவதையும், தினமும் இரண்டு வேலை குளிப்பது நல்லது.
ஏற்கனவே, தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.