காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயல் சின்னமாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்…!!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி, ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று புயலாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆயிரத்து 140 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழகம் – ஆந்திரா நோக்கி இது நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை நோக்கி மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.