காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிக்கும்….வானிலை ஆய்வு மையம் தகவல்…!!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.கஜா புயல் கரையை கடந்த பிறகு உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய மழை சென்னையில் இடைவிடாமல் கொட்டிவருகிறது. இரவுபகலாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com