கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் தகவல்…!!
தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முடிந்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ
மழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கினாலும் அது இன்னும் வலுப்பெறவில்லை. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
dinasuvadu.com