Categories: வானிலை

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள்…!!

Published by
Dinasuvadu desk
கஜா கரையை கடந்த சூழலில் தற்போது  புயல் சேத விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுக் கொண்டு இருக்கின்றது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.
கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது.
கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என வானிலை மையம்  தகவல் வெளியிட்டு உள்ளது.
* கஜா புயல் தற்போது திண்டுக்கல்  பகுதியில் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும், திண்டுக்கல்லில் 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
* கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* கஜா புயலால் நாகை ரயில் நிலையம்  சின்னாபின்னமானது.
* ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும், 421 நிவாரண முகாம்களில் 81,948 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
* தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
* நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் என்று மின்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
* கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
* தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம் அடைந்து உள்ளன.
* சிவகங்கையில் சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் உயிரிழந்தார்.
* கஜா புயல் காரணமாக தற்போது வரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
dinasuvadu.
Published by
Dinasuvadu desk

Recent Posts

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

3 mins ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

26 mins ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

1 hour ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

1 hour ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

2 hours ago

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…

2 hours ago