எச்சரிக்கை..!! தமிழகத்தில் இரண்டு நாள் கனமழை சென்னை வானிலை மையம் தகவல்..
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே சமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்.
நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை.சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், நந்தனம் பகுதிகளில் மழை. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மழை.
இந்த நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும். இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
DINASUVADU