இன்று டிசம்பர் 21ம் நாள் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள்..!
இன்று டிசம்பர் 21ம் நாள் “Winter Solstice ” என்று சொல்லப்படும் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள் ஆகும். பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது என அறிவோம். அப்படி வரும்போது சூரியன் பூமத்திய ரேகையை விட்டு வெகு தொலைவை அதாவது கடைக் கோடியை அடையும் நாள் இதுவாகும். இன்றையதினம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள அனைத்து பகுதிக்கும் நீண்ட இரவும் மிகக் குறுகிய பகலும் நிலவும். வடதுருவத்தில் முற்றிலும் இரவு மட்டுமே இருக்கும். தென் துருவத்தில் முழுதினமும் பகலாகவே இருக்கும். இது நிகழும் சரியான நேரம் 23.03 UTC . தமிழகத்தில் சென்னையில் நேரம் 22ம் தேதி காலை 5.03 ஆகும்.
source: dinasuvadu.com