மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

annamalai

டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை  என அண்ணாமலை கருத்து. 

கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், கர்நாடகாவுக்கு சென்றே மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன். மேகதாது அணை கட்டுவது உறுதி என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube