Viral Videos : ஓ சாகி சாகி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடிய நபர்..!
ஓ சாகி சாகி பாடலுக்கு அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் நடனமாடிய நபரின் வீடியோ இணையத்தில் வைரல்.
சமூக ஊடகங்களில் பலவிதமான பொழுதுபோக்கு மற்றும் நடன வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது, நேபாள நபரின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் பிரபல பாலிவுட் பாடலான ஓ சாகி சாகிக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் நடனமாடியுள்ளார்.
அவர் தனது உடல் அசைவுகளை வைத்து அப்பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடியுள்ளார். அவரது நடன அசைவுகள் இப்பாடலில் நடனமாடிய நோரா ஃபதேஹி உட்பட பலரின் பாராட்டைப் பெற்றன. மேலும், வைரலாகி வரும் இந்த அட்டகாசமான நடன விடீயோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram