#viral: $12,000 டாலருக்கு விற்க்கப்பட்ட ராணி எலிசபெத் II பயன்படுத்திய டீபேக்
ராணி எலிசபெத் II 1998 இல் பயன்படுத்திய ஒரு டீபேக், அவரது மரணத்திற்குப் பிறகு eBay இல் 12,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். மேலும் 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது 70 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூரும் வகையில், 1998 இல் ராணி எலிசபெத் II பயன்படுத்திய ஒரு டீபேக் $12000 டாலருக்கு விறக்கப்பட்டது.
இதன் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9,54,834 ஆகும்.