#Viral:ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி அருகே மயங்கி விழுந்த காவலர்!!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் மயங்கி விழும் வீடியோ வைரலாகியுள்ளது.
தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,கிட்டத்தட்ட 6 கிமீ தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், வியாழன் அன்று ராணியின் சவப்பெட்டிக்கு அருகில் காவலில் நின்றிருந்த காவலர்களில் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A royal guard at Queen Elizabeth II’s coffin collapses inside of the chapel. pic.twitter.com/JI1MyfdtkV
— Alex Salvi (@alexsalvinews) September 14, 2022