விநாயக பெருமானுக்கே ஆதார் கார்டு.! வைரலாகும் புகைப்படம்!

Default Image

ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள்.

இரண்டு வருட கோவிட் லாக் டவுனுக்கு பிறகு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் பலரும் விநாயக பெருமானின் சிலைகளை வாங்கி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நபர் விநாயகருக்கு ஆதார் அட்டையை அச்சிட்டு அதனை கட்டவுட் அடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த ஆதார் அட்டையில்,  ஸ்ரீ கணேஷ் S/o மகாதேவ், கைலாஷ் பர்வத், மேல் தளம், அருகில் மான்சரோவர், ஏரி, கைலாஷ் பின்கோடு- 000001 மற்றும் பிறந்த ஆண்டு 01/01/600CE எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விநாயகரின் ஆதார் அட்டையில் உள்ள பார் கோடை ஸ்கேன் செய்தால் கூகிளில் உள்ள விநாயகரின் புகைப்படங்களை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்